அரசுப் பள்ளி ஆசிரியை செய்த நெகிழ்ச்சி செயல்

கோவையில் உள்ள மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த தனது மகனை, அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார் கோவையை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர்.

கோவை மாவட்டம் கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் விக்டோரியா. இவர் செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் ஜெரிக் சாமுவேல். இவர் சோமனூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். ஜாஸ்மினுக்கு தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் குடும்பத்தினர் ஒத்துழைப்பு வழங்காததால் ஆரம்பம் முதலே அவரை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் தற்போது குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு தனது மகனை ஆத்துப்பாளையம் அரசு பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்த்திருக்கிறார். நான் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டு என் மகனை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைப்பதை நான் விரும்பவில்லை என்று கூறும் ஜாஸ்மின். தன்னை பார்த்து பலரும் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.