பிக் பாஸ் தீபாவளி

ஹாய்… இது ரொம்ப சந்தோசமான தருணம். பிக்பாஸ்ல இருந்து வெளியில் வந்து நான் கொண்டாடும் முதல் பண்டிகை தீபாவளிதான். பிக்பாஸ் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. என்னை நானே புரிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லுவேன். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு பிக்பாஸ் மூலமாக கிடைத்தது. நம்ம வாழ்க்கையில நடக்குற சம்பவத்தை குறும்படமா பார்க்க முடிஞ்சுது பிக்பாஸ்லதான், எனக்கு எப்பவும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறது பிடிக்கும். அதே போல் இந்த தீபாவளி எனக்கு ட்ரிபிள் தீபாவளியா அமைந்திருக்கிறது. எப்பவும் தீபாவளியை என் குடும்பத்தோட கொண்டாடுவேன். ஆனால் இந்த வருஷம் பிக்பாஸ் சொந்தங்களோட கொண்டாடப்போறேன். எனக்கு ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் கிடைத்திருக்கிறது. இதைவிட சந்தோசம் என்ன இருக்கு.

பிக்பாஸ் வீட்டுல 50 ஆவது நாள் வெளில வந்தேன். நான் கெட்டவனானு எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துச்சு. உடனே கமல் சார் கிட்ட கேட்டேன். உடனே அவர் சொன்னாரு ‘‘நீ ஏன் கவலைப்படுற? இதுல நீ நீயாத்தான் இருந்த, அதனால மத்ததப்பத்தி கவலைப்படாத. இதுல இருந்து என்ன கத்துக்கிட்டன்னு பாரு. உன் திறமையைக் காமிக்கறதுக்கு ஒரு களம் இது. இதை வரும் காலத்துல சரியா பயன்படுத்திக்கோன்னு சொல்லிட்டார். அப்புறம் எங்க அப்பாவுக்கு கால் பண்ணினேன். அப்பா சொன்னார், ‘‘உன்னப் பத்தி எனக்குத் தெரியும். நீ என் பையன். சந்தோஷமா வீட்டுக்குவான்னு சொன்னார். அம்மா கொஞ்சம் கவலைப்பட்டாங்க. அப்புறம் நான் அவங்கள சமாதானம் பண்ணிட்டேன்.

இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன். ஜிஎன் குமாரவேல், நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் படத்தின் இயக்குநர். அவர் படத்துல நடிக்க தயார் ஆகிட்டு இருக்கேன். இன்னும் மூன்று நல்ல தீபாவளி வரப்போகுது. பகல் முழுக்க என் மனைவி, என் பையன்கூட தீபாவளி கொண்டாடிட்டு, மாலையில் என் பிக்பாஸ் குடும்பத்தோட சேர்ந்து தீபாவளி கொண்டாடப் போறேன். அந்த தருணத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் (சிரித்துக் கொண்டே). இந்த சக்தி நல்லவனுக்குள்ள இருக்கிற கெட்டவன், ரொம்ப கெட்டவன் கிடையாது. (சிரித்துக் கொண்டே) ஸ்வீட்ஸ் நிறைய சாப்பிட்டுகிட்டு, சந்தோசமா இந்த தீபாவளியைக் கொண்டாடுங்க. எங்க பிக்பாஸ் குடும்பம் எல்லோரும் சேர்ந்து சொல்றோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

– பாண்டியராஜ்…