பள்ளிகளில் விவசாயத்தை பாடமாக்க வேண்டும்

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வலியுறுத்தல்

பள்ளிகளில் விவசாயத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று உழவுக்கு வந்தனை செய்வோம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியுள்ளார்.

இந்த மனுவில், பல்வேறு சிரமங்களை தாண்டியும் விவசாயிகள் மக்களின் பசியைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றனர். அதேசமயம் வருங்கால தலைமுறையினரிடம் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், வேளாண்மையில் ஈடுபடுவதின் அவசியத்தையும் உணர்த்த வேண்டும். எனவே இதற்கு விவசாயத்தை பாடமாக்குவது தான் ஒரே தீர்வாக அமையும்.  தொழில் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விவசாயக் கல்விக்கும் அளிக்க வேண்டும்.

மேலும் புதிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்தும் பொழுது, அனைத்து வகுப்புகளிலும் விவசாயத்தை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டத்திலும் விவசாயப் பாடத்தை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.