சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் கூடுதல் பங்களிப்பு வழங்க வேண்டும்

– மாவட்ட ஆட்சியர் ராசாமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்திய மருத்துவ சங்கம், தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

சுகாதாரத் துறை இயக்குநர் வடிவேலன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.காளிதாசு, இணை இயக்குநர் மரு.கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ரமேஷ்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், இன்னும் கூடுதல் படுக்கை வசதிகளையும், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையளிப்பதற்கு தனி வார்டு, இதர நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகள், ஐ.சி.யூ. வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகள் அமைக்க வேண்டும்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம், சிகிச்சை பெறுபவர்கள், குணமடைபவர்களின் விவரம் மற்றும் இறப்பு விவரத்தினை தனியார் மருத்துவமனைகள் சுகாதாரத் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

கொரோனா மருத்துவப் பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.