திரையரங்க ஊழியர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கிய ரஜினி மக்கள் மன்றம்

பொள்ளாச்சி நகர ரஜினி மக்கள் மன்றம் மற்றும் நகர வர்த்தக அணி மற்றும் இளைஞர் அணியின் சார்பாக நடிகர் ரஜினியின் 45 ஆண்டு கால கலையுலகப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், பொள்ளாச்சியில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.

நகர செயலாளர் டைரக்டர் பிரபுகுமார் தலைமை வகித்தார். இணை செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஏடிஎஸ்சி தியேட்டர் உரிமையாளர் பரமசிவம், நகர வர்த்தக அணி செயலாளர் கணேஷ், நகர இளைஞர அணி செயலாளர் பாலாஜி, தெற்கு ஒன்றிய செயலாளர் தணிகாசலம், வடக்கு ஒன்றிய இணை செயலாளர், சேது ராமலிங்கம், துணை செயலாளர் சரவணன் மற்றும் சக்திவேல், சிவராம், புருஷோத்தமன், சேகர், ராஜ்குமார், சங்கீத், ரஜினி, செல்லத்துரை, நிஷாந், பிரபு, நரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.