கோவையில் நேற்று 471.40 மில்லி மீட்டர் பதிவாகிய மழை

கோவையில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 471.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என பேரிடர் மேலாண்மை துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவும் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1.4 மில்லி மீட்டர் மழை, வால்பாறையை அடுத்த சின்கோனா பகுதியில் 102 மில்லிமீட்டர் மழை, சின்னக்கல்லார் பகுதியில் 107 மில்லி மீட்டர் மழை.

கோவை தெற்கு பகுதியில் 8 மில்லி மீட்டர் மழை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் பகுதிகளில் 70 மில்லி மீட்டர் மழை, வால்பாறை தாலுகாவில் 68 மில்லி மீட்டர் மழை, சோலையாறு பகுதியில் 107 மில்லி மீட்டர் மழை

இதன்படி, கோவையில் நேற்று ஒரே நாளில் 471.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவாக 33.67 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.