கோவை ஞானி மறைவு விமர்சக உலகத்திற்கு மிகுந்த பேரிழப்பு

– இயகோகா சுப்பிரமணியம், தலைவர், நன்னெறிக் கழகம்

பார்வைக் குறைபாடு இருந்தாலும், மிகவும் தெளிவான நோக்கமும், சிந்தனையும், துணிவும் உள்ள மாமனிதர். எளிமையாக இருந்தாலும், கொள்கையின் மீது வலிமையான பிடிப்புக் கொண்டவர். நம் மண்ணில் இவர் வாழ்ந்தது நமக்குப் பெருமை.
மார்க்சிஸ, கம்யூனிஸ சித்தாந்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவருடைய மார்க்சிஸ கருத்துகளுக்கு நான் எதிரானவன் என்றாலும், இவரின் ஆழமான சிந்தனையும், கருத்தும், தமிழ் மீதான ஆர்வமும் என்னை ஈர்த்தது.
‘மார்க்சிஸ சிந்தனைகள் தெரியாதவன் முட்டாள்’என்பார். பழகுவதற்கு இனியவர், தமிழில் மூழ்கிக் களித்தமாமனிதர். இவரது எழுத்துக்களில் மிளிரும் சிந்தனைகள் மிக மிக எளிமை மற்றும் உணர்ப்பூர்வமானவை. கடவுளைக் குறித்த இவரது கட்டுரை எனக்கு மிகவும் நெருக்கமானது.