ஞானத் தந்தை ‘ஞானி’

– எழுத்தாளர் சு.வேணுகோபால்

இவரது எழுத்துப் பதிவுகள் பெரும்பாலும் சமூகத்திற்கு பயன்படக்கூடியதாகவோ அல்லது ஏதாவது பாத்திரங்களை மையப்படுத்தியோ, செயல்பாட்டை முன்னிலைப்படுத்தியோஇருக்கும். ஒரு தனிமனிதன் மற்றும் சமூகத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்னவென்று கூறுவதில் தேர்ந்தவர்.

பெண்களின் மீது பெரிய மதிப்பு கொண்டவர். அவர்களுக்கு எதிரான அநீதிகளைப் பற்றி நிறையப் பேசுவார். திருக்குறள் அல்லது சங்கஇலக்கியத்தில் உள்ள மேலான சரத்தினை எடுத்துக் கொண்டு வாழலாம் என்பது இவர் கூறியவற்றில் முக்கியமான ஒன்று.

இவர் நவீன தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்த முறை மிகவும் கவர்ந்த ஒன்று. ஒரு விமர்சகராக ஒரு நாவலில் எது சிறப்பானபகுதி, எது தொய்வானபகுதி, எதை இன்னும் சிறப்புற செய்திருக்கலாம் என்பதை பன்முகப் பார்வையுடன் கூறுவார். திருக்குறள், கம்பராமாயணத்தை ஆய்வு செய்து இவர் கூறிய கருத்து, ஈர்ப்பு.

பட்டுப்புழு நாளை இறந்துவிடுவோம் என்று தெரிந்தும் இன்று தனது வேலையை செய்கிறது. அதைப்போல் நாமும் இந்த சமூகத்திற்கு ஒரு நூலைத் தந்து செல்ல வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். மார்க்ஸியன் என்பவன் ஒரு ‘செயின்டை’ போன்றவன் என்பார்.

திறனாய்வு செய்வதில் என்னை மிஞ்சிவிட்டாய் என்று புன்னகைத்தபடி கூறியதை வாழ்வில் மறக்க முடியாது. ஞானத் தந்தையிடம் சிஷ்யனாக நிறைய அறிவைப் பெற்றிருக்கிறேன். இவரது மறைவு மிகுந்த துயரம் தருகிறது.