சிறப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் ஆய்வு

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதமான முறையில் நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் மற்றும் துணை ஆணையாளர் மதுராந்தகி ஆகியோர், மண்டலங்களுக்கு உட்பட்ட ராமலிங்கம் காலனி, பாரதி பார்க் மற்றும் அதன் குறுக்கு தெருக்கள், நெசவாளர்கள் காலனி, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் சிறப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும், வீடு வீடாக சென்று அறிகுறி உள்ளவர்கள், சளி, காய்ச்சல், இருமல் போன்றவைகள் உள்ளவர்களை பரிசோதிக்க அமைக்கப்பட்டுள்ள 15 குழுக்கள் செயல்படும் விதத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.