கம்ப்யூட்டரில் இனி இதயமே ‘பாஸ்வேர்டு

கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது. இது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் ஒவ்வொருவரின் இதயமும் வேறுபட்டு அமைந்துள்ளது. இந்த நவீன முறையை நியூயார்க்கில் உள்ள யு.பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பயோமெட்ரிக் மற்றும் பிற பாதுகாப்பு முறையைவிட இது மிகவும் சிறந்தது, துல்லியமானது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.  இதயத்தை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் முறை, இப்போதைக்கு கம்ப்யூட்டருக்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள், விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனைகளில் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.