மருத்துவ முகாம்கள் ஆய்வு

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மத்திய மண்டலம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாநகராட்சி துணை ஆணையாளரும் பறக்கும் படையினருடன் வடக்கு மண்டலம் ஜனதா நகர், சரவணம்பட்டி, சின்னமேட்டுப்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.