ஆதரவற்றோர்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கிய அகில பாரத அனுமன் சேனா

இறந்து போன  தங்களின் முன்னோர்கள் மற்றும் தாய் – தந்தையரை குறித்து, அவர்கள் நற்கதி அடையும் வகையில் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் சிறப்புக்குரியவை. அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளில் இந்த விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, ஆடி அமாவாசையில் மறைந்த முன்னோர்களின் நினைவாக, அகில பாரத அனுமன் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர், ஆஞ்சநேயா அறக்கட்டளையின் தலைவருமான ஸ்ரீதரன் ஜி வழிகாட்டுதலின் படி அகில பாரத அனுமன் சேனாவின் செய்தி தொடர்பாளர் பத்மஜா முருகைய்யன் கோவையில் முக்கிய பகுதிகளில் சாலையோரம் வசித்து வரும் ஏழை, ஆதரவற்றோர்களுக்கு ஆடி அமாவாசை அன்னதானம் வழங்கினார். இதில் வாழை இலை வைத்து வடை, பாயாசத்துடன் அவர் பரிமாறிய உணவை சுமார் 500க்கும் மேற்பட்டோர் அருந்தி வாழ்த்தினர்.