ஹீண்டாய் மோட்டார் நிறுவனத்தின் புதிய திட்டம்

கொரோனா தொற்று பரவல் காலத்தை முன்னிட்டு, நாடு தழுவிய வாகன சுகாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை ஹீண்டாய் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் கோவை திருச்சி ரோட்டில் அமைந்துள்ள கோவை ஹீண்டாய் ஷோரூமும், திருப்பூர் பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள திருப்பூர் ஹீண்டாய் ஷோரூமும் பங்கேற்கிறது.

இவ்வியக்கமானது ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாடிக்கையாளர்கள் தங்கள் ஹீண்டாய் கார்களை இலவசமாக 50 Points General check Up செய்து கொள்ளும் வசதியும், Interior Smoke Sanitization செய்ய ரூ.599, Interior Surface Sanitization செய்ய ரூ.999 மற்றும் Exterior Dry wash செய்ய ரூ.340 மட்டும் செலுத்தினால் போதும்.
இது தவிர புதிய காரை டெலிவரி எடுப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் உண்டு. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் ஹீண்டாய் கார்களை சிறந்த முறையில் சர்வீஸ் செய்து பயன் பெறலாம் என்று கோவை ஹீண்டாய் & திருப்பூர் ஹீண்டாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.