கொரோனா அவசரநிலையை பயன்படுத்தி போலி இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றி வசூல் வேட்டை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் அவசர தேவைகள் இன்றி மற்ற வேலைகளுக்காக, பிற மாநிலம் மற்றும் மாவட்டம் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த கும்பல் ஒன்று, முகநூல் மூலம் பயணிகளை கண்டறிந்து, எர்ணாகுளம் – விசாகபட்டினத்திற்கு திருமணம் மற்றும் இறப்பிற்கு செல்வதாக இ- பாஸ்களை வாங்கி அதன் மூலம், கோவை வழியாக செல்ல அனுமதி பெறுகின்றனர்.

பின்னர் கேரளாவில் இருந்து கோவை, உள்ளிட்ட பிற மாவட்டங்கள் செல்லும் பயணிகளையும், ஆந்திரா செல்லும் பயணிகளையும் வழியில் ஏற்றிக்கொள்கின்றனர், பிறகு வாளையார் சோதனைச்சாவடியில் உறவினர்கள் என கூற கடந்து சென்று வந்துள்ளனர். தொடர்ந்து ஒரே வாகனம் எல்லைகளை கடப்பதால் சந்தேகமடைந்த க.க.சாவடி போலீஸார், மதுக்கரை ஆய்வாளர் தூயமணிவெள்ளைச்சாமி தலைமையில், உதவி ஆய்வாளர் ரத்தீஸ், அடங்கிய தனிப்படை போலீஸார் கண்காணிப்பை தீவிரபடுத்தினர், அப்போது போலீஸில் குழு அமைத்து திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக, பேஸ் புக் மூலம் கும்பலிடம் கூறி உள்ளனர். இதையடுத்து பேரம் பேசி வாளையாறு எல்லைக்கு வந்த பேருந்து மடக்கி பிடித்த போலீஸார் அதில் இருந்த மோசடி கும்பலை சேர்ந்த முகமது சபாது என்பவரை கைது செய்தனர்.

மேலும் பேருந்தை பறிமுதல் செய்த போலீஸார், அதில் வைக்கப்பட்டிருந்த போலீ ஆவணங்கள், பயணிகள் விவரங்களை சேகரித்தனர். மோசடி கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆண்டனி குரியன் என்ற நபரை விரைவில் கைது செய்வதாகவும் தற்பொழுது இவன் கேரள மாநிலத்தில் தலைமறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது.