உலக இரத்த தான தினம்

ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் ஏ, பி, ஓ இரத்த வகையைக் கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாளையும் இரத்ததானம் வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை அனுஷ்டிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இரத்ததானம் செய்வோரை ஊக்குவிக்கும் நல்லதொரு வாய்ப்பாகவும் இது அமைகின்றது.

உலகில் எத்தனையோ கோடி மக்கள் இருந்தாலும் இன்று மருத்துவமனையில் இருந்து ரத்தம் கிடைக்கவில்லை என்ற வார்த்தை ஒளித்து கொண்டுதான் இருக்கிறது.

ஒருவர் வழங்கும் ரத்தத்தின் மூலம் நான்கு பேரின் உயிரை காப்பாற்ற முடியும்.