கோடைக்காலத்தை சமாளிக்க என்னென்ன செய்யலாம்?

கோடைக்காலத்தை சமாளிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நொறுக்குத் தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.

காரம் நிறைந்த உணவு பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

அலுவலகத்திற்கு செல்பவர்கள் சீரக தண்ணீரைப் பருகினால் வெப்பத்தினால் ஏற்படும் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.

குளிர்ந்த நீரைக் குடிக்க நினைப்பவர்கள் பானையில் ஊற்றி வைத்து குடிப்பதால் உடல்நலத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

கருப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது அவசியம்.

பகல் நேரங்களில் இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றைக் குடிக்கலாம்.

ஐஸ்கிரீம், குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழச்சாறு எடுத்து கொள்ளலாம்.

உடல் சூட்டைத் தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்களை அதிகமாக சாப்பிடலாம். முக்கியமாக தர்பூசணி, தக்காளி, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அதிகமாக குடிக்கலாம்.

வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.

பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

கோடைக்காலத்தில் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.

டிபன் 8 மணி, மதிய உணவு 1 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெயிலுக்கு ஏற்ற காட்டன் ஆடைகளை அணிந்து கொள்ளவது நல்லது.

வெளியே செல்லும்போது குடையும், தண்ணீரும் உடன் கொண்டு செல்வது அவசியம்.

அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது அல்லது குறைத்துக் கொள்வது உடல்நலத்தைக் காக்கும்.