விஷாலிடம் சிக்கிய ஆண்ட்ரியா…

தமிழ் சினிமா இயக்குனர்கள் எப்போவும் ஒரு புதுமையான படங்களை எடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது அடிதடி படமாக இருந்தாலும் சரி மக்களுக்கு கருத்து சொல்லும் படமாக இருந்தாலும் சரி. படம் பார்க்கும் பொழுது நாம் என்ன அதில் தெரிந்து கொள்கிறோம். நேரம் எப்படி கடக்கின்றது என்பதை பார்த்து பலர் சினிமாவுக்கு செல்வது வழக்கம். ஆனால் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இந்த உலகத்தில் பல விஷயங்கள் நடந்து வருகிறது என்பதை நாம் சினிமாவில்தான் பார்த்து புரிந்து கொள்ள முடியும். துப்பறியும் பல படங்கள் ஹாலிவுட்டில் நாம் பார்த்திருந்தாலும் நம்மை சுத்தி இருக்கிற சூழலை மையமாக வைத்து துப்பறியும் படம் பார்த்தால் எப்படி இருக்கும். அந்த உணர்வு கொடுத்த படம்தான் துப்பறிவாலன். துப்பறிவாலன் என்று சொன்னவுடன் விஷாலின் கதாபத்திரம் பேசும் அளவுக்கு இருக்கும் என்று மக்கள் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.

அதை போல் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து உணர்ந்து நடித்து இருக்கிறார் விஷால். பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ட்  நடத்தி கொண்டு இருக்கும் விஷாலுக்கு ஒரு நாய் இறந்து போன கேஸ் இவர் பார்வைக்கு வருகின்றது. அந்த நாய் இறப்புக்கு பின்னால் பல தொடர் கொலை சம்பவம் நடக்கின்றது. அது கொலையா இல்லை விபத்த என்று புரியாமல் இருக்கும் காவல் துறைக்கு, அந்த கொலை சம்பவத்தில் இருக்கும் ஒவ்வொரு சுவாரஷ்ய முடிச்சை எப்படி அவிள்கிறார் என்பதை அழகான திரைக்கதை வடிவத்தில் மிஷ்கின் காமித்து இருக்கிறார். இந்த ஒவ்வொரு கொலைக்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்கின்றது என்பதை படத்தின் பாதியில் நம்மால் உணர முடிகிறது. அதில் முக்கியமாக கே பாக்யராஜ், வினய் ,ஆண்ட்ரியா , இந்த கொலைகளை செய்து வருகிறார்கள். பணத்துக்காக .. இவர்களை விஷால் கண்டுபிடித்து நெருங்கும்போது எதிர் பாரத காட்சிகள் நம் கண் முன் தோன்றுகிறது.

அந்த எதிர்பாரத காட்சிகளை இங்கு சொல்வதை விட படம் பார்க்கும்போது தனித்துவமாக இருக்கும் என்பதை ஆணித்தரமாக கூறலாம். சில காட்சிகள் நமக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் மனதில் ஒரு சில வருத்தம் சோகம் காதல் இவை அனைத்தையும் நம்மால் துப்பறிவாலன் படம் பற்கும்போது உணர முடியும். படத்தில் காதல் காட்சி கிடையாது ஆனால் அழகான காதல் இருக்கின்றது. மாறுபட்ட மனிதனுக்குள் எப்படி காதல் இருக்கும் என்பதை விஷால் நடிப்பில் நம்மால் பார்க்க முடியும். அதை காதல் இறப்பில் முடியும் போது திரையரங்கில் கை தட்டல்கள் குவிகின்றது.  படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் வரும் வேகமான சண்டை காட்சி உலக தரத்தை கண் முன் கொண்டு வந்துவிட்டது. கதைக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டு பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, கே. பாக்யராஜ் நடித்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு நல்ல எடுத்துகாட்டாக அமைகிறது.

இசை arrol corieli , ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன், இவர்கள் இரண்டு பேரும் படத்தின் முதுகெலும்பு. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கு பின்னால் என் கற்பனை மற்றும் சிறந்த கலைஞன் இருக்கான் என்பதை நம் மனதில் மிஷ்கின்யின் பெயர் ஒளித்து கொண்டு இருக்கும். மொத்தத்தில் துப்பறிவாலன் பார்க்க வேண்டிய படம். சில தவறுகளை நாம் குறிப்பிட்டு சொல்லாமல், அதில் இருக்கும் நல்ல விஷயத்தை ரசிப்பது சிறந்த மனிதனுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கும்.

  • பாண்டியராஜ்