நோய் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யும் சிறப்பு குழு

கோவை மாநகராட்சியில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, தமிழக அரசின் ஆணையின்படி, கள ஆய்வுக்குழு அலுவலர்கள் சென்னை மண்ணியல் மற்றும் கனிமவளம் இயக்குனர், சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குனர் கஜலெட்சுமி ஆகியோர் தலைமையிலான குழுவினர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடவத் முன்னிலையில் மாநகராட்சி பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வில், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னாராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) காந்திமதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மத்திய மண்டலம் ராமநாதபுரத்திலுள்ள அம்மா உணவகத்தில் தரமான உணவுகள் தயாரிக்கப்படுகிறதா எனவும், காந்திபுரம் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டு காய்கறிகளை பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாங்குகிறார்களா என்பதையும், பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்துள்ளார்களா என்பதையும் பார்வையிட்டு கள உதவிக்குழு அலுவலர்கள் ஆய்வு செய்தார்கள்.

பின்னர், டி.பி.ரோடு மற்றும் சிரியன் சர்ச் ரோடு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை நேரில் பார்வையிட்டும், பி.என்.புத்தூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்காக கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் நடைபெற்றதையும், புளியகுளத்தில் மாநகராட்சியுடன் இணைந்து நல்லறம் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணிகளுக்காக உணவு தயாரிக்கும் பணிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றதையும் கள ஆய்வுக்குழு  அலுவலர்கள் ஆய்வு செய்தார்கள்.