இணையம் வாயிலாக ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்ணணுவியல் துறை சார்பாக “பவர் சிஸ்டம் பயன்பாடு, பவர் கண்ட்ரோலர்கள், டிரைவ்கள் மற்றும் மின்வாகனங்களில் தொழில் நுட்ப முன்னேற்றம்” என்னும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஏப்ரல் 27, 2020 முதல், மே 01, 2020 வரை இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது.

இப்பயிற்சிகளை டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர், பொற்குமரன் 27-04-2020 அன்று துவக்கி வைத்தார். துவக்க விழாவிற்கு பாண்டிக்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ஜீவானந்தம் முன்னிலை வகிக்க, ஆட்டோ டெஸ்க் மேலாளர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக துறைத் தலைவர் எஸ்.ஜெகன்நாதன் அனைவரையும் வரவேற்றார்.

திறன் மேம்பாட்டு பயிற்சியின் உள்ளடக்கங்களை உதவிப் பேராசிரியர் ஆர்.பி.செல்வகுமார் தொகுத்து வழங்க, தலைமை விருந்தினர் எஸ்.ஜீவானந்தம் அவர்களை இணை பேராசிரியர் கே.ரமாஷ்குமார் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, முதல் அமர்வாக “மாடலிங் ஆப் BLDC மோட்டார்” எனும் தலைப்பில் உரையாற்றிய ஜீவானந்தம் அவற்றின் வகைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.

இப்பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளார்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சிகள் உள்ளடக்கம் சிறப்பாகவும், பயன் அளிக்கக் கூடியதாகவும் இருந்ததாக பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்தினைப் பதிவு செய்தனர்.