உணவின் மீதான ஜிஎஸ்டியை ஓராண்டுக்கு ரத்து செய்யவேண்டும்

ஊரடங்கு உத்தரவால் ஓட்டல் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண ஓட்டல்களுக்கு உணவின் மீதான சதவீத ஜிஎஸ்டி ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில நிர்வாகிகள் வெங்கடசுப்பு, சீனிவாசன், கணேசன் கூறியதாவது: இப்போது, கொரோனாவால் ஓட்டல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. இந்த வைரஸ் தொற்று நீங்கி, ஊரடங்கு சட்டம் விலக்கு செய்யப்பட்டாலும், விருந்தோம்பல் தொழில் முழுமையாக மீண்டெழுவதற்கு குறைந்த பட்சம் ஓராண்டு காலமாகும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் பெரியதும், சிரியதுமாக சுமார் 50 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. இதில், 15 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். மறைமுகமாக சுமார் 45 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். இந்நிலையில், ஓட்டல்கள் நீடித்து செயல்படுவதன் மூலம், சுமார் 60 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதுக்ககப்படும். இதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள் மட்டுமே நீடித்த சேவைக்கு வழிவகுக்கும். கட்டட வாடகை ஊழியர்களின் ஊதியம், வங்கிக்கடன் மீதான வட்டி, ஈவுத் தொகை ஆகிவை ஓட்டல்களின் நிலையான செலவினங்கள், அடுத்த ஓராண்டுக்கு விற்பனை வருமானம் மூன்றில் ஒரு பங்காகத்தான் இருக்கும். இந்த நிலையில், இந்த செலவினங்களை ஓட்டல் எதிர்கொள்ள முடியாது. தொழில் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், எங்களின் கட்டட உரிமையர்கள் ஊரடங்கு காலத்துக்கான வாடகையை முற்றிலும் தள்ளுபடி செய்யவேண்டும். அதன்பின்னர், 6 மாத காலத்துக்கு 50 சதவீதம் வாடகை பெற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும் வாடிக்கையாளர் வருகையை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண ஹோட்டல்களில் உணவின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி கட்டிட வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். இஎஸ்ஐ சட்டத்தில் செயல்படும் ‘அடல் பீமட் வியக்தி கல்யாண் யோ ஜனா’ திட்டத்தின் கீழ் ஓராண்டு காலத்திற்கு ஊழியர்களின் ஊதியத்தில் 50 சதவீத தொகையை மானியமாக வழங்க வேண்டும்.

அத்துடன் இபிஎஸ் திட்டங்களுக்கான பங்களிப்பு தொகையை செலுத்துவது 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். ஹோட்டல்கள் பெற்றுள்ள வங்கி கடன்கள் மீதான வட்டி 50 சதவீத அளவுக்கு ஆறு மாத காலத்திற்கு குறைக்க வேண்டும் மாதாந்திர ஈவுத்தொகை செலுத்துவதே ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கவேண்டும். தேவைப்படுவோருக்கு 25 சதவீத கடனை இருக்கின்ற செக்யூரிட்டிலேயே வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கட்டடங்களில் செயல்படும் ஓட்டல்கள் செலுத்த வேண்டிய வாடகையை ஆறு மாத காலத்துக்கு ரத்து செய்ய வேண்டும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.