கெவின்கேர் நிறுவனத்தின் 1 ரூபாய் சானிடைசர்

கொரோனா வைரஸில் இருந்து தப்ப இன்று வரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், சானிடைசர் ஒன்று தான் கொரோனா தாக்காமல் இருக்க பதுக்காக்கும் ஒன்றாக உள்ளது. இதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். எது நமக்கு தேவையோ அது தான் தட்டுபாடுகள் வரிசையில் முன்னிலையில் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் சாமானிய மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் அதிக விலைக்கும், அரிதாகவும் கிடைக்கிறது. இதற்குத் தீர்வாக கெவின்கேர் நிறுவனம் தனது `சிக்’ பிராண்ட் மூலமாக 1 ரூபாய் சாஷேயில் சானிடைசரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு புதிய தயாரிப்பாக இல்லமால் அடித்தட்டு ஏழை மக்களுக்கு எங்களால் இயன்ற சேவையாக இதைக் கருதுகிறோம் என்கிறார் கெவின்கேர் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன்.
இதனை ’சிக்’ பிராண்டில் மட்டுமல்லாது, ’நைல்’ மற்றும் ’ராகா’ ஆகிய பிராண்டுகளிலும், வெவ்வேறு அளவுகளில் சானிடைசர்களைக் கொண்டுவந்துள்ளது இந்நிறுவனம்.
சி.கே.ரங்கநாதனின் தந்தை சின்னிகிருஷ்ணன், சாஷே பாக்கெட்டுகளில் அடைத்த ஷாம்பு விற்பனையைத் தொடங்கி, அடித்தட்டு மக்களும் ஷாம்புவைப் பயன்படுத்தும்விதமாக, இந்திய விற்பனைத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். அப்படி முதன்முதலில் கொண்டுவரப்பட்டதுதான் வெல்வெட் ஷாம்பு சாஷே. அதேபோன்று தற்போது சானிடைசர்களிலும் சாஷே முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தகவல் : விகடன்