அத்துமீறி வலம் வரும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் மாநகர போலீஸ்

கோவை மாநகரில் அத்துமீறி இயங்கிய 2241 வாகனங்களுக்கு மஞ்சள் பெயிண்ட் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

கோவை மாநகர பகுதியில் 144 தடை உத்தரவை மீறி வலம் வரும் வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 12 செக்போஸ்ட் மற்றும் 22 தற்காலிக செக் போஸ்ட்களில் தடை உத்தரவை மீறி வலம் வந்த வாகனங்கள் மடக்கி பிடிக்கப்பட்டன. காலை 9 மணி முதல் 11 மணிவரை 1788 இருசக்கர வாகனங்கள், 8 மூன்று சக்கர வாகனங்கள் 445 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
மொத்தமாக 2241 வாகனங்களுக்கு போலீசார் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்தனர்.
மறுமுறையும் இந்த வாகனங்கள் நகர் பகுதியில் தடையை மீறி வந்தால் மீண்டும் மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்படும் இருமுறை மஞ்சள் நிற பெயிண்ட் அடித்த பின்னரும் வாகனங்கள் ரோட்டில் உலா வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் அறிவித்துள்ளார். இனி திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் பெயிண்ட் அடிக்க மாநகர போலீஸ் திட்டமிட்டுள்ளனர்.