தேசிய அளவில் மூன்று விருதுகளைப் பெற்ற கிருஷ்ணா பொறியியல் கல்லூரி

கோவை,  குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிக்கு மூன்று தேசிய விருதுகளை ஐ.சி.டி. அகாடெமி நிறுவனம் இன்று சென்னையில் ஐ.சி.டி இணைப்பு சந்திப்பு – 2020 நிகழ்ச்சியில் வழங்கியது. இக்கல்லூரியின் முதல்வர் ஜேனட் இவ்விருத்தினைப் பெற்றார். தொழில் நிறுவனங்களுடன் அதிக தொடர்பு உள்ள கல்வி நிறுவன   2020 விருது இக்கல்லூரிக்கு கிடைத்துள்ளது. இந்திய அளவில் மொத்தம் 232 கல்லூரிகள் பங்கெடுத்த போட்டியில் இக்கல்லூரி இவ்விருதினை வென்றுள்ளது.

மேலும் இரண்டாவது விருது தேசிய கிளவ்ட் சாம்பியன் 2019 விருதினை இக்கல்லூரி அமேசான் நிறுவனத்துடன் இணைந்து நவீன தொழில் நுட்பங்களை ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு அதிக அளவில், சிறப்பாக மற்றும் பயன் உள்ளதாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, கற்றுக் கொடுத்தற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல மூன்றாம் விருதினை இக்கல்லூரியின் தொழில் நுட்பத்துறையின் தலைவர் சுசிலா சிறந்த பேராசிரியர் ஒருங்கிணைப்பாளர் விருத்தினைப் பெற்றுள்ளார். இவர் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவினை பலநிகழ்சிகள் மூலம் கற்றுக் கொடுத்தற்காக 500 பேராசிரியர்கள் பங்கேற்ற போட்டியில் இவருக்கு கிடைத்துள்ளது.

இவ்விருது பெற்ற இக்கல்லூரியின் முதல்வர் ஜேனட், பேராசிரியர்களை, அலுவலர்களை மற்றும் மாணவர்களை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன் பாராற்றினார்கள்.