கே.எஸ்.ஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 76 முதுகலை மாணவர்களுக்கும், 365 இளங்கலை மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார். கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பயின்று பாரதியார் பல்கலைக்கழக ரேங்க் ஹோல்டர் பெற்ற மாணவர்கள் 5 பேருக்கு மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 88 ஆயிரம் காசோலை கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குணாளன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி தாளாளர் கே.எஸ் கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை வணிக வரித்துறை ஆணையத்தின் முதல்வர் சந்தனா ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் பெற்றோர்களுடன், அன்புடனும், ஆதரித்தும் பேணி நடக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நோக்கம் சிறிய அளவில் இல்லாமல், பெரிய அளவில் இருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், அனைவரையும் மதிக்கும் எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

இதில் கல்லூரியில் உள்ள 11 துறைகளில் இருந்து 445 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் பங்கேற்றனர்.