ஜிகேடி தொழில்நுட்ப வள நிறுவனத்தின்  பட்டமளிப்பு விழா

ஜிகேடி தொழில்நுட்ப வள நிறுவனம் – டாடா சமூக அறிவியல் மற்றும் தொழில் கல்வி நிறுவனத்தின் 2வது பட்டமளிப்பு விழா, கோவை ஜிகேடிஐடிஆர் வளாகத்தில் நடந்தது. 124 பேர் பட்டங்களை பெற்றனர். ஜிகேடி நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் லலிதாதேவி சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, பட்டமளிப்பு விழா உரையாற்றினார். டாடா சமூக அறிவியல் மற்றும் தொழில் கல்வி நிறுவனத்தின் தேர்வு மற்றும் சான்றிதழ் துறை தலைவர் சதானந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

ஜிகேடி தொழில்நுட்ப வள நிறுவனம், டாடா சமூக அறிவியல் மற்றும் தொழில் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, தொழில் கல்வியை அளித்து வருகிறது. சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வாழ்க்கையை மேம்படுத்த உதவி வருகிறது. டாடா சமூக அறிவியல் மற்றும் தொழில் கல்வி நிறுவனம், யூஜிசி அங்கீகாரம் பெற்றுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் வழிகாட்டுதலில் பாடத்திட்டங்களை வகுத்துள்ளது.

ஒருங்கிணைந்த இப்பயிற்சி திட்டத்தில், படிக்கும்பேதே சம்பாதிக்கும் முறையில், பயிற்சி பெறுவோர் கல்வி உதவி தொகை பெற வாய்ப்புகள் உள்ளன.