அன்னாசி பழத்தில் என்ன ஆபத்து ?

அன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.

அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.

அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.

பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும், கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.

அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். இது பற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும்.

முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம். அன்னாசி பழம் சாப்பிடும்போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும்.

அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. அதனால் இதை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும்.

அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்

அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இதில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.

அன்னாசியின் ஆரோக்கிய நன்மைகள்

1. மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம்
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது உங்கள் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் இந்த ப்ரோமெலைன் நிறைய ஆரோக்கிய சிறப்புகளை கொண்டது.

2. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கின்றது
அன்னாசியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.

3. காயங்களை விரைவில் ஆற்றுகின்றது
அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பலத்தினை உட்கொண்டு வரவும்.

4. எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது
அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.

5. அதிகமான நார்ச்சத்து
அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கின்றது.மேலும் உங்களின் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது. நார்ச்சத்து உணவுகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்திற்கும் மிக மிக முக்கியம்.

6. உடல் எடையினை குறைக்க உதவும்
அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. மேலும் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

7. இரத்த அழுத்தம் குறையும்
இன்றைய நவீன உலகில் பலபேர் உயர் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுகின்றனர். இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது.

இதனை உண்டு வந்தால் உங்களின் இரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தினால் அவஸ்தை படுபவர்கள் அன்னாசி பழத்தினை உண்டு வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

8. கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். எனவே அன்னாசி பழத்தினை தினமும் உட்கொண்டு வாருங்கள்.