அமிர்த விஸ்வ வித்யா பீடம் நடத்தும் ‘அனோகா 2020’

கோவை அமிர்த விஸ்வ வித்யா பீடம் தேசிய அளவில் நடத்தும் ‘அனோகா 2020’ பதிப்பின் ஒரு பகுதியாக, மக்கள் தொடர்பு துறை, ‘அன்வாரா’ என்ற புற்றுநோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டியது.

புற்றுநோயாளிகளின் நல வாழ்வுக்காக ‘கேன்சர்வ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு உதவும் நோக்கத்துடன் மக்கள் தொடர்பு துறை இந்த நிகழ்வை நடத்தியது. கொச்சியிலிருந்து இயங்கும் கேன்சர்வ் அமைப்பிற்கு, பல பிரபலங்கள், டாக்டர்கள் மற்றும் கலை நிபுணர்கள், விரைவுரையாளர்கள் மற்றும் அரசியலாளர்கள் இதன் அறக்கட்டளைக்கு  உதவி வருகின்றனர். ஆளுமை, அழகு மற்றும் நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட இயற்கையில் அர்த்தமாக கொண்ட ‘அன்வாரா’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

இரண்டு நாள் நிகழ்ச்சியில், அன்வாரா – அனோகா 2020, முன்னோட்ட நிகழ்ச்சியை, கோவை வளாகத்தில் – அமிர்தா ஏற்பாடு செய்திருந்தது. இந்த டிஜே இரவில், கோவையில் சிறந்த பாடகர் மனோஜ்குமார் ஆர் அகா அவர்களின் நிகழ்ச்சி வெள்ளொளியில், நடந்தது. நல்ல ஒரு காரணத்துக்கான நடனத்தை அனைவரும் ரசித்தனர். அனோகாவின் கீழ் நடக்கும் இந்த அன்வாரா நிகழ்ச்சியில் 434 பேர் பதிவு செய்து நன்கொடை அளித்தனர். இந்த நிகழ்ச்சி ஒரு சமுதாய பொறுப்பிற்காக நடந்தது.

அன்வாரா நிகழ்ச்சியில் பிரபலங்கள், பூர்ணிமா இந்திரஜித், மிஸ் இன்டியா ஆராதானா நாயர், லட்சுமி அகர்வால், பேஷன் போட்டோகிராபர் ரெஜி பாஸ்கர், கேரியோகிராபர்  மற்றும் மாடல் குஷ்பு தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ரேடியோ ஜாக்கி அபிநந்தன் அக்கா அபி நிகழ்ச்சிக்கு உதவினார். இரண்டாவது நாள் நிகழ்வில், ஆடை அலங்கார அணிவகுப்புகள் நடந்தன. இரண்டாவது நாளில், பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி பெற்றவர்கள் கையால், கன்சர்வ் நிறுவனத்திற்கு, நன்கொடைகள் வழங்கப்பட்டன.