வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி, கிழக்கு, மத்திய மண்டலங்களுக்குட்பட்ட வார்டு எண்.56, 75, 68 ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் புதிதாக ரூ.43.60 கோடி மதிப்பீட்டில் 40 mld கொள்ளவுடன் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், ஒண்டிப்புதூர் கழிவுநீர் பண்ணை அருகில் புதிதாக ரூ.36.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஒண்டிப்புதூர், திருச்சி சாலை பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சேகரிக்கும் குழாய் பதிப்பு பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் புதிதாக ரூ.78.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பூங்காவினையும், பூங்காவின் அருகில் ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ் நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் உமாதேவி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தார்கள்.