கேபிஆர் கலை கல்லூரியில் டெக் பிளாஸ்ட் ’20

கோவை, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் டெக் பிளாஸ்ட் ’20 கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ட்விர்ல் டக்ட் சொலுஷன் பிரைவேட் லிமிடெடின்  தலைவர் மற்றும் முதன்மை நிர்வாகி ஷியாம் பிரசாத் ராஜசேகரன் வாழ்க்கையில் கிடைக்கும் சிறிய வெற்றி பெரிய அளவில் சாதிக்கத் தூண்டும். ஆகவே மாணவர்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் ஏற்படுத்திக் கொண்டு மட்டுமே சாதிப் அதோடு அல்லாமல் தன்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். டெக்னிகல் என்பது அனைத்துத் துறைகளிலும் அடிப்படை தேவையாக உள்ளது என்று கூறி சிறப்புரை வழங்கினார்.

கேபிஆர் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் செயலர் எ.கே.முனுசாமி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிக்கு அடிப்படையாக அமையும் என்று கூறி தலைமை உரை வழங்கினார். கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பாலுசாமி, ஆரோக்கியமான போட்டிகளில் மாணவர்களின் திறமைகளுக்கு மிகப்பெரும் சவாலாகும். போட்டிகளில் வெற்றி பெறும்போது மாணவர்களின் மனம் தன்னம்பிக்கைக்கு உட்பட்டு வாழ்வில் அனைத்து தருணங்களிலும் வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கும். தற்போதைய சூழலில் அனைத்து துறைகளிலும் டெக்னிக்கல் அறிவு தேவைப்படுகிறது ஆகவே மாணவர்கள் தங்களின் அறிவை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார். டெக்னிகல் குவிஸ், கனெக்க்ஷன், போஸ்டர் ப்ரஸடேஷன், போஸ்டர் டிசைன், பேப்பர் ப்ரஸடேஷன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.