கொடுக்காய்ப்புளி மருத்துவப் பயன்கள்

சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மையான மரங்களில் ஒன்றாக கொடுக்காய்ப்புளி மரம் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த மரத்தின் காய்கள் எளிதில் உதிராது என்பதால் ‘உகா மரம்’ என்ற பெயரில் குறிப்புகள் காணப்படுகின்றன. “கொடுக்காய்ப்புளி மரத்தின் கிளைகள் புறவு நிலம்போலக் காணப்படும். புறவு நிலம் என்பது முல்லை நிலத்தில் பயிர் செய்ய வயல் வயலாகத் தடுக்கப்பட்ட நிலம் ஆகும்.

மருத்துவப் பயன்கள் :

மருத்துவ குணம் கொண்ட கொடுக்காய்ப்புளி மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியன மாதவிடாய் சிக்கல், நீர்க்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது. கோணற்புளி சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் சக்தியாக விளங்கியது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும். கோணற்புளி மரங்களில் தயாரிக்கப்படும் மரச்சாமான்கள் நீடித்து உழைக்கும்.