5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு இந்த ஆண்டு மட்டுமே பொதுத்தேர்வு

 

ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவன் அவன் பெறும் மதிப்பினை வைத்துதான் இந்த உலகம் அவனை எடைபோட்டுவிடலாம். இது தான் தற்பொழுது அநேகமானோரின் மனநிலை. அதிலும் அவன் பொதுத்தேர்வில் பெரும் மதிப்பினை வைத்து தான் அவனது எதிர்காலமே அமைந்துள்ளது. இதில் தோற்று விட்டால் இவன் இருந்து என்ன பயன் என்று அவனே எண்ணி கொள்கிறான். தேர்வுகள் ஒரு மாணவனை எடைபோடலாம் ஆனால், ஒரு மனிதனை எடைபோடமுடியாது.

கடந்த ஆண்டுவரை 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தான் பொதுத்தேர்வு இருந்தது. ஆனால், தமிழக அரசால் இந்த ஆண்டு 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று கடந்த 2019 செப்டம்பர் 13 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர் என பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த ஆண்டு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறாது எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.