இந்துஸ்தான் கலை கல்லூரியில் ‘உயிரி உச்சி மாநாடு’

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உயிர்த் தொழில்நுட்பவியல் உயராய்வுத் துறையும் நுண்ணுயிரியல் துறையும் இணைத்து நடத்திய 16 வது உயிரி உச்சி மாநாடு கல்லூரி வளாகத்தில் “சிகிச்சை நோக்கங்களுக்காக நுண்ணுயிரிகளை ஆராய்தல்” என்ற கருத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயல் அலுவலரும், செயலருமான பிரியா சதீஸ்பிரபு வியட்நாம் கேன் தோ பல்கலைக்கழக வேளாண் கல்லூரியின் மண் அறிவியல் துறை இணைப்பேராசிரியர் ஞ்யான் கொய் ஞயா, சன் யாட்-சென் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைப்பேராசிரியர் ராஜிவ்காந்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கடல் நுண்ணுயிரியல் துறை இணைப்பேராசிரியர் மனோகரன், கோவை டி.ஆர்.டி.ஓ – பாரதியார் பல்கலைக்கழக இணை இயக்குனர் கதிர்வேலு, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் “தாவரங்களின் பாதுகாப்பில் மண்ணுயிர்களின் பயன்பாடு”,  “சிறுநீரக நோய்த்தொற்றுக்கு எதிராக ஆக்டினோமைசிஸின் நோயெதிர்ப்புத் திறனும் அதன் செயல்பாடும்”, “கடல்சார் வளங்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மேலும் இதில் இம்மாநாடு குறித்த மதிப்புரையும் வழங்கப்பட்டது.