ராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியின் ப‌ட்ட‌மளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவக்கழகத்தின் ஓர் அங்கமான மருந்தாக்கியல் கல்லூரியின் ப‌ட்ட‌மளிப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ப்போர்ஸ் லேபாரிட்ரி ப்ரைவேட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ். வி. வீரமணி கலந்துக் கொண்டார். எஸ்.என். ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, கல்லூரி முதல்வர் ரவி, துணை முதல்வர் கோபால்ராவ் ஆகியோர் முதன்மை வகித்தனர். மேலும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.