கேபிஆர் பொறியியல் கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு

கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவை மாவட்டம் சுகாதாரத்துறை ஆகியவற்றின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மற்றும் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும், சூலூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் உமர் பரூக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் மற்றும் டிவிங்ஸ்டனி ஆகியோரின் தலைமையிலன குழுவும், கல்லுரியின் முதல்வர் அகிலா வழிகாட்டுதலில், கல்லூரியின் தேசிய மாணவர் படை ஒருகிணைப்பாளர். ஏ.கே. பிரியா தலைமையிலான கேபிஆர் பொறியியல் கல்லூரி குழுவும் இணைந்து கோவை மாதப்பூர் ஊராட்சியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் முதல் நாளும், ஊத்துப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரண்டாம் நாளும் வீடுவீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் கொசுப்புழு ஒழிப்பு பணியையும் மேற்கொண்டனர்.

மேலும், டெங்கு கொசுக்கள் பரவும் சூழ்நிலைகள் அதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.