கோவை விஜயம்

ஸ்ரீ மத் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்ப்ரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் கோவை விஜயம்

கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டம், ஹரிஹரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா சாரதா லஷ்மி நரசிம்ம பீடாதிபதி ஸ்ரீ மத் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்ப்ரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் கோவையில் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் அருள்பாலிக்கிறார்.
இதனை முன்னிட்டு ராம்நகர் ராமர் கோவிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் டிசம்பர் 10 முதல் 16 வரை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சந்திரமெளலீஸ்வரர் பூஜை, காலை 10 முதல் 11 மணி வரை ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிகளின் தரிசனமும், மாலை 6.30 முதல் 8.30 மணி வரை ஸ்வாமிகளின் நவாவர்ண பூஜையும் நடைபெற உள்ளது. மேலும் ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் டிசம்பர் 15 -ம் தேதி காலை 10 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம் ஸ்வாமிகளின் தலைமையில் நடைபெற உள்ளது.