கேஐடி சார்பில் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்  கல்லூரியில், டாக்டர் வித்யா இன்குபேசன் சென்டர், உன்னத் பாரத் அபியான் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக “எல்.ஈ.டி விளக்கு சட்டசபையைப் பயன்படுத்தி கிராமங்களை இயக்குவதற்கான சமூக சேவை கற்றல்”  பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

டாக்டர் வித்யா இன்குபேசன் சென்டர் மூலம் இளம் பொறியாளர்கள்  புதிய ஆராய்ச்சிப்படைப்புகளை உருவாக்குவதற்கும் மற்றும் வடிவமைப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றனர். கேஐடி டாக்டர் வித்யா இன்குபேசன் சென்டர் மூலமாக கிராம மக்களுக்கு 1000 எல்.இ.டி பல்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.இதன் முதற்கட்டமாக முன்னாள் கேஐடி மாணவர், HAPEC SOLUTIONS நிர்வாக இயக்குனர், கெளதம் வழிகாட்டுதல்படி தற்போது முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் தயாரித்த  சுமார் 100 எல்.இ.டி பல்புகள் பட்டணம்புதூர்  கிராமத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டு அவற்றை  எவ்வாறு பொறுத்துவது மற்றும் அவைகளை உபயோகப்படுத்துவதால் எப்படி மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம் என்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை எங்கள் கல்லூரி மாணவர்கள் விளக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கே.ஐ.டி-கல்லூரி முதன்மையர் மாணவர் அமைப்பு சுரேஷ், துறைத்தலைவர் மைதிலி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.