தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐ.டி. துறை சார்பாக தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐ.டி. துறை சார்பாக ஸ்பைடர் என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அகஸ்டா ஐ டெக் சொலுசியன் கம்பெனியின் அசோசியேட் துணைத் தலைவர் கார்த்திக் சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, ஐஐடி துறை தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து 840 மாணவ மாணவிகள், 86 பேராசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இக்கருத்தரங்கில் ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்த மேகஸின் வெளியிடப்பட்டது. மேலும் இதில் வினாடி – வினா, வெப் டிசைனிங், மார்க்கெட்டிங், பிழைத்திருத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், ரொக்கப்பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த வெற்றி புள்ளிகளை பெற்ற கல்லூரிகளுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும், கேடயங்களும் வழங்கப்பட்டது.