பிஷப் அம்ப்ரேஸில் மிலனோ எக்ஸிபிஷன்

பிஷப் அம்ரோஸ் கல்லூரியில் வணிக துறை சார்ந்த Comfabians Association வழங்கும் கோவை மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கான மிலனோ எக்ஸிபிஷன் 2019 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக ராமகிருஷ்ணா கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் அகிலா, பிஷப் அம்ரோஸ் கல்லூரியின் செயலாளர் ஜெரோம், கல்லூரி முதல்வர் பீட்டர்ராஜ், வணிகவியல் துறைதலைவர் திரவிய ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.

நிறைவு விழாவில் கல்லூரியின் செயலாளர் மற்றும் முதல்வர் சிறந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான முதல் பரிசு, இரண்டாம்  பரிசு, மூன்றாம் பரிசு வழங்கி சிறப்பித்தார்கள். இதில் முதல் பரிசு பி.எஸ்.ஜி.கிருஷ்ணமாள் பள்ளியும், புனித மிக்கேல் பள்ளியும், கோவை கலைமகள் கல்லூரியும் பெற்றார்கள். இரண்டாம் பரிசு இந்துஸ்தான் கல்லூரியும், மூன்றாம் பரிசு ராமகிருஷ்ணா கல்லூரியும் பெற்றார்கள்.