விபத்தில் காயம்பட்டவர்களுக்கு உதவினால் 5,000 சன்மானம்

புதுச்சேரியில் கடந்த 26-ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் ”புதுச்சேரி” மாநிலத்தில், விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி.

இந்த திட்டம் மனித நேயத்தை மற்றும் உதவும் நேரத்தில் எதாவது நேர்ந்தால் பிரச்சனையில் சிக்கி கொள்வோமோ என்ற அச்சம் ஏற்படாது. இது மற்ற மாநிலங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரமாக இருக்கிறது.

இதைபோல் மற்ற மாநிலங்கள், மற்றும் நாடுகள் பின்பற்றினால் விபத்தில் உயிரிழக்கும் விகிதம் அதிகப்படியாக குறையும். நாம், சாலையில் யாரேனும் அடிபட்டு கிடந்தால் அவர்களை சுற்றி நின்று வேடிக்கை தான் பார்ப்போம். அப்பொழுதும் யாராவது ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க என்ற குரல் வரும் அனால், ஆம்புலன்ஸ் வராது. இந்த நிலை மாறினால் பாதி மக்கள் மனித நேயத்துடன் செயல்படாவிட்டாலும் இப்படி ஒரு சலுகை இருக்கிறது என்பற்காகவாது இதனை செய்வார்கள்.