சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

கேபிஆர் கல்வி குழுமங்களும் கருமத்தாபட்டி காவல் துறையும் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது. கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் பொம்மனராஜா அவர்களும், கேபிஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி  கல்லூரி முதல்வர் பாலுசாமி மற்றும் கருமத்தாபட்டி காவல் துறை ஆய்வாளர் சண்முகம் அவர்களும் இணைந்து இவ்விழிப்புணர்வு நிகழ்வை தொடக்கிவைத்து சாலைப்பாதுகாப்பு முக்கியத்துவத்தை பற்றி சிறப்புரையாற்றினார்.

வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள், குறைவான வேகம் மற்றும் வாகங்கள் பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவை துண்டுப்பிரசுரமாக வழங்கபட்டன. கேபிஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி  கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருமத்தாபட்டி டோல்கேட், கருமத்தாபட்டி பேருந்து நிறுத்தம், நீலாம்பூர் டோல்கேட் மற்றும் சின்னையம்பாளையம் பேரூந்துநிறுத்தம் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.