பூனை கண்காட்சி மற்றும் வளர்க்கும் முறை குறித்து கருத்தரங்கு

தமிழ் நாட்டில் முதல் முறையாக பதிவு பெற்ற கோயம்புத்தூர் கேட்டரி கிளப் சார்பில் பூனை கண்காட்சி, பூனை வளர்ப்பு மற்றும் கருத்தரங்கு ஆகஸ்ட் 25 அன்று நடைபெற உள்ளது. இதில் கோவையில் உள்ள மரபு ரீதியாக அனைத்து வகையான பூனைகளும் இடம் பெரும். இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பூனைகளை பற்றி தெரிந்து கொள்ள வசதியாக பல்வேறு வகையான பூனைகளின் படங்களும், கருத்தரங்குகளும் இடம் பெறுகிறது.

கோவை, சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள கோயம்புத்தூர் ரோட்டரி கிளப், டெக் சிட்டி ஹாலில் ஆகஸ்ட் 25 ம் தேதி ஞாயிறன்று காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயம்புத்தூர் கேட்டரி கிளப் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில், இந்தியாவின் ஒரே பூனை நடுவர் சுதாகர் கதிகினேனி பங்கேற்கிறார். இவர் பூனை குட்டிகள், பூனைகளை பராமரிப்பது, பூனைகளை பெருக்குவது, பற்றியும் விளக்கமளிக்க உள்ளார். பூனைகளை பற்றி அறிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சிக்கு சுப்ரமணியன் ராயல் கேர் மற்றும் பாலாஜி பர்மினா விநியோகஸ்தர்கள் உதவி செய்கின்றனர். இதே நாளில், பூனைகளுக்கு, கோவை ஜெஎஸ்ஆர்.செல்லப்பிராணிகள் சிறப்பு மருத்துவமனை டாக்டர் வேணுகோபால் இலவசமாக வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும் குடல்புழு நீக்கமும் செய்கின்றனர். உலகம் முழுவதும் 93 வகையான பூனைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 41 வகையான பூனைகள் உள்ளன. கோவையில் பெர்சியன் லாங் கேட், பெர்சியன் சாட் கேட், ஹிமாலயன் கேட், பெங்கால் கேட், சியாமிஸ் கேட், சைபீரியன், ரஷ்யன் ப்ளூ, இந்தியன் நாட்டு வகை பூனைகள் உள்ளன. இதில் சுமார் 15 வகையான பூனைகள் காட்சிப்படுத்த உள்ளன.