பார்லே பிஸ்கட் விற்பனை பெரும் அளவில் சரிவு

பார்லே புராடட்க்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது பிரபலமான பிஸ்கட் கம்பெனி. இந்த நிறுவனத்தின் பிஸ்கட் பாக்கெட் விற்பனை பெரிதும் சரிந்துள்ளது. இதனால், உற்பத்தியை நிறுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உற்பத்தி நிறுத்தத்தால் 10,000 தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் விடுப்பு தரப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை மற்றும் கூடுதல் ஜிஎஸ்டி வரியால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று பிஸ்கட் கம்பெனியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், தற்போது பெருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கார்கள், துணைமணிகள் உள்பட பல்வேறு தொழில்களில் விற்பனை சரிந்துள்ளது. இதனால் உற்பத்தியை குறைக்க அல்லது நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெருளாதார தேக்க நிலையில் இருந்து தொழில் நிறுவனங்களை காப்பதோடு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தை போக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் பெருக்கத்திற்கு தேவையான ஊக்க சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தொழில் துறையினர் எதிர்பார்த்து  காத்திருக்கின்றனர்.

* பார்லே நிறுவனத்தின் பிஸ்கட் விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது. இதனால், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி மயாங் ஷா தெரிவித்துள்ளார்.
* கடந்த 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. பிஸ்கட்கள் மீது கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிறுவனத்தின் பிஸ்கட் விற்பனை பெரிதும் சரிந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5க்கு விற்கக்கூடிய பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டிற்குகூட அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.