உலக அழகன் ஹிருத்திக் ரோஷன்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகிலேயே அழகான ஆண் யார்? என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் ஏராளமானோர் வாக்களித்தனர்.

இந்த போட்டியில் முதல் 5 நபர்கள் பட்டியலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் எவான்ஸ், ராபர்ட் பேட்டின்சன், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்களை தோற்கடித்து இந்த பட்டத்தை அவர் வென்று இருக்கிறார்.

இந்த மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர். ஹிருத்திக் ரோஷன் இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் இந்திய அளவில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. காரணம் இவரது உயரம், உடல் கட்டு, நிறம், போன்றவைகளை இவரது நடிப்பும் இவருக்கு முக்கியமான ஒன்று. இதை வைத்து தான் பல ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

தற்பொழுது கூட ஒரு பெண்ணுக்கு மாப்பிளை பார்க்கும் பொது அந்த ஆண் ஹிருத்திக் ரோஷன் போல் இருந்தால் நல்லா இருக்கும் என்று பல பெண்கள் எதிர்பார்ப்பார்கள்.  இந்த எதிர்பார்ப்புகளின் கேள்விக்கு பதில் தான் இந்த செய்தி.

சமீபத்தில் வெளியான சூப்பர் 30 படம் 140 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.இவர் அடுத்து ‘வார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.