கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு கருத்தரங்கு

கோவை மாவட்ட பிளஸா இன் பிஸினஸ் ஹோட்டலில் நேற்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.இக்கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி அவர்கள் குத்துவிளக்குகேற்றி துவங்கி வைத்தார்.

கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், கொத்தடிமை தொழில் என்பது ஒருவரை ஏதேனும் ஒரு வகையில் பரம்பரையாகவோ அல்லது அவரது காலத்திலோ கொத்தடிமையாக வைத்திருப்பதும், ஒருவரது மூதாதையரில் யாரோ ஒருவர் வாங்கிய கடனுக்காக தலைமுறை, தலைமுறையாகக் கொத்தடிமையாக இருப்பதும், கொத்தடிமையாக இருப்பதற்கு உடன்படிக்கை செய்வது போன்றவை கொத்தடிமைகளாக அமர்த்துவதாகும்.

இதனை ஒழிப்பதற்காக இந்திய அரசால் கொத்தடிமைத் தொழில் முறை ஒழிப்புச் சட்டம்  இயற்றப்பட்டது. இச்சட்டமானது பொருளாதாரம், உடலுழைப்புச் சுரண்டப்படுவது மற்றும் அது தொடர்பான விளைவுகளை தடுக்கும் நோக்கத்தின் பொருட்டு கொத்தடிமைத் தொழில்முறையை ஒழிப்பதற்கு வகை செய்கிறது. முதலாளிகளிடமும், தொழிலாளர்கள், குடும்பத்துடனோ, தனியாகவோ, கொத்தடிமை தொழிலாளர்களாக பணி மேற்கொள்ளும் முதலாளிகளின் மீது இச்சட்டத்தின்படி, கடுமையான தண்டனைகளும் அபாரதங்களும் விதிக்கப்படுகின்றது. கோவை மாவட்ட கொத்தடிமைகள் அற்ற மாவட்டமாக உள்ளது. பிற மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு ஏற்ற பணிசூழலினை அரசு வழங்கி வருக்கின்றது. இச்சட்டத்தினை அனைத்து அலுவலர்களும் சீரிய முறையில் எடுத்து கையாண்டதின் விளைவாக கொத்தடிமைகள் முறை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. இக்கருத்தராங்கினை நீங்கள் அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி அவர்கள் பேசினார்.