இந்துஸ்தான் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிகவியல், கணினி பயன்யிட்டுத்துறையும், மாவட்ட வட்டார போக்குவரத்து துறையும் மற்றும் மாருதி லுட்டினர் பள்ளியுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர்களாக பாஸ்கரன் RTO, CBE (central) அவர்கள் கலந்துகொண்டு  மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் விதிமுறைகள் குறித்தும் விளக்கமாக கூறினார் மற்றும் சரவணன் RTO, CBE (south). சாலை பாதுகாப்பு மற்றும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினார். மேலும், மாருதி நிறுவனத்தின் தலைமை மேலாளர், சிபிமோன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கல்லூரி முதலவர் பொன்னுச்சாமி சாலை பாதுகாப்பு கையேடு வெளியிட்டதைப் பெற்றுக்கொண்டார். மாணவர்களுக்கு கையேட்டுகள் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.