பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

கோவை பிஷப் அம்புரோஸ் கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக “சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும்” என்னும் பொருண்மையினை தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கின்  தொடக்கவிழாவில் கல்லூரிச் செயலாளர் ஆர்.டி.இ.ஜெரோம் தலைமையுரை வழங்கினார். தமிழ்மொழியின் தனிப்பட்ட சிறப்புகளை அவர்தம் உரையில் எடுத்துரைத்தார். கல்லூரியின் முதலவர் பீட்டர்ராஜ் முன்னுரை வழங்கினார். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் அந்தோணியம்மாள் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் முதல் கொங்குநாடு கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முருகேசன் “சங்க இலக்கியத்தில் காதல்” என்னும் தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் நேரமகா வித்யாலயா கல்லூரி தமிழ்த்துறை தனலட்சுமி “சங்கம் காட்டும் காதல்” என்னும் தலைப்பிலும், மூன்றாம் அமர்வில் பூ.சா.கோ. கல்லூரியை சார்ந்த பொற்கை ஆதிரை அவர்கள் “சங்க இலக்கியத்தில் வீரம்” என்னும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சரவணகுமார் நன்றி கூறினார்.

சங்க இலக்கிய மரபுகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கம் இக்கருத்தரங்கில் நடைபெற்றது.