(ஜூலை 29) மருத்துவனை தினம்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் நாம் அனைவரும் அறிந்த முத்துலட்சுமி. இவர் பிறந்த தினம் இன்று.  1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர் பார்க்காத தும்பம் இல்லை. எங்கு திரும்பினாலும் நோய், எப்பொழுதும் நோய், இவரது வாழ்வில் இவர் பட்ட துயரம், எவராலும் ஆறுதல் சொல்ல முடியாத துயரம். நாம் நம் வாழ்வில் ஒருசில கஷ்டங்கள் மட்டும் அனுபவித்து விட்டு அதனையே தாங்க முடியாமல் நாம் தவித்து கொண்டிருக்கிறோம். அனால் இவர் பிறக்கும் போதே நோயுடன் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது கிட்டபார்வை ஏற்பட்டு கண்ணாடி அணிந்தார். நாளடைவில் ரத்த சோகை வந்தது. பின்பு ஆஸ்துமாவும் தொற்றிக் கொண்டது. மூச்சுத் திணரலால் இரவு ஒழுங்காக தூங்க முடியாது. திருமணம் நடந்து பிறந்த முதல் குழந்தைக்கு கக்குவான் இருமல் பாதிப்பு இருந்தது. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும் சக்தி இல்லை. இரண்டாவது குழந்தையின் கண்ணை பயன்படுத்தக் கூடாத திரவத்தை கொண்டு கழுவி விட்டார்கள். அக்குழந்தையின் கண்கள் வீங்கிவிட்டது. குடல் மந்தமும், மல சிக்கலும் இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்டது.

ஏற்கனவே பிறந்த முதல் குழந்தைக்கு வலிப்பு நோய் வந்து நினைவாற்றல் இழந்து போனது. அந்த பெண்ணின் முதல் தங்கைக்கு தொடர் வயிற்றுப் போக்கு இருந்தது. இரண்டாவது தங்கை, திருமணம் நடந்து சில நாட்களிலேயே புற்றுநோய் ஏற்பட்டு இறந்து போனார். இப்படி திரும்பிய இடமெல்லாம் நோயை பார்த்த அப்பெண் ஒரு உறுதி எடுத்தாள். மனிதனை ஆட்டிப்படைக்கும் நோய்களை விரட்ட வேண்டும் என்று சபதம் எடுத்தாள் அந்த பெண். ஆம் அந்த பெண் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

இத்தகைய குமுறல்கள் நிறைந்த இவர் வாழ்வில் இவர் செய்தது மிக பெரிய சாதனை தான்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான இன்று (ஜூலை 29) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவனை தினம் கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர்  கூறியுள்ளார்.