கல்லூரி மாணவர்களுக்கிடையே வினாடி,வினா போட்டி

பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பாக துறை மாணவர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றன. இதில் மிக பிரபலமான தொழில் நிறுவனங்களின் கொள்கைகள் என்ன? என கண்டறிதல் தொழில் நிறுவனங்களின் CEO களை கண்டறிதல், தொழில் சார்ந்த வினாடி,வினா கேள்விகள் போன்ற போட்டிகள் நடைபெற்றது.

இதில் துறை தலைவர் ஆனந்த் ஜெரால்டு முன்னிலையில், மேலாண்மை துறை மன்ற பிரதிநிதி, நான்சி பால் இப்போட்டியை வழிநடத்தினார். தொழில் சார்ந்த போட்டா போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.