சென்னையில் தயாரான முதல் பேட்டரி கார்

இந்தியாவில் முதல்முறையாக ஹூண்டாய் எஸ்.யூ.வி ரக எலக்ட்ரிக் கார் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

ஹூண்டாய் கோனா என்ற எஸ்.யூ.வி. ரக எலக்ட்ரிக் கார் தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் உருவாக்கப்பட்ட இந்த கார், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்த காரின் முதல் சிறப்பம்சம் இது பெட்ரோல், டீசல், போன்ற எரிபொருள்கள் இல்லாமல் எலக்ட்ரிக் பேட்டரி மூலம் இது செயல்படும்.இதன் விலை 25 லட்சம், காரின் விலை மட்டும்,  வரிகள் உட்பட மற்ற செலவுகள் சேர்த்தால் 30 லட்சம் வரை இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் 9.7 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் செல்லும் அளவிற்கும் இதனை தயார் செய்துள்ளனர். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 19 மணி நேரம் ஆகிறது. இது முழுமை அடைந்ததும் 452 கி.மீ. வரை இந்த எலக்ட்ரிக் கார் மூலம் பயணம் செய்ய முடியும். இதனை வீட்டில் பயன்படுத்தபடும் மின்சாரம் மூலமே சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இது முழுவதும் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.