குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்

தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டமும், டியூசன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து, நடத்திய கோவையில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் அண்மையில் நடைபெற்றது.

இந்த குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பி.எஸ்.ஆர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 3000 பேர் பங்கேற்றனர்.

முன்னாள் குழந்தைத் தொழிலாளர் மாணவ-மாணவிகள் குழந்தைத் தொழிலாளர் ஆக இருந்தபோது ஏற்பட்ட பாதிப்புகள், மீட்கப்பட்ட பிறகு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்ந்து கல்வி கற்ற அனுபவங்கள் மற்றும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளையும், தற்போது தங்களுக்குள் ஏற்பட்ட தன்னம்பிக்கையையும் நினைவுகூர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

நிகழ்ச்சிகளுக்கு இடையே பொதுமக்கள் குழந்தை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் நீக்கப்பட்ட முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து பட்டப்படிப்பு முடித்தவர்கள், தற்போது பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இளம் சாதனையாளர் விருதுகள் வழங்கி பாராட்டினார்.

மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்கள் பேசும்பொழுது, தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் தொழில் துறையிலும் கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. ஏழ்மை மற்றும் சமூக சூழ்நிலைகளில் காரணம் காட்டி குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. குழந்தைகள் கல்வி கற்பதற்கு தேவையான எல்லா வசதிகளையும் வாய்ப்புகளையும், தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தனியார் நிறுவனத்தின் ஒத்துழைக்கும் தேசிய குழந்தை தொழிலாளர் முறையை கட்டும் திட்டமும் இணைந்து 3000 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியது, என்றார்.

இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மற்றும் பரிசு பெற்ற அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்ற திட்டத்தின் இயக்குனர் விஜயகுமார், பியூசன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிர்வாக இயக்குனர் ஜீவிதா, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் நம்பிராஜன் மற்றும் களப்பணியாளர்கள் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.